பாக்கு மட்டை தட்டு தயாரித்து மாதம் 20ஆயிரம் முதல் 50000 ஆயிரம் வரை சம்பாதிப்பது எப்படி ????

  DigitalMedia2020
 0

சுய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த பாக்குமட்டை தட்டு தயாரித்து விற்பனை செய்யும் தொழில் சிறந்த தொழில் ஆகும்.

ஏன் என்றால் பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று நம் தமிழக அரசு அறிவித்துள்ளதால் இந்த மாற்று தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கும் எனவே தயக்கம் இன்றி இந்த தொழிலை தொடங்கலாம்.


தேவையான முதலீடு: 

பாக்குமட்டை தயாரிக்க இயந்திரம் மற்றும் மூலப்பொருட்களுக்கு மட்டும் தான் நம் முதலீடு  இயந்திரம் 40,000/ மற்றும் பாக்கு மட்டை  ரூ 30,000 சேர்த்து சுமார் ரூ 70,000 இருந்தால் போதும்

தேவையான இட வசதி: 

இந்த தொழில் துவங்குவதற்கு 10-க்கு 10 அடி நீளமுள்ள ஒரு சிறிய அறை இருந்தால் போதும். 


தேவைப்படும் இயந்திரம்

பாக்குமட்டை தயாரிக்கும் இயந்திரங்களை பொறுத்த வரை பல வகைகள் உள்ளன. 

குறைந்த விலையில் ஹேண்ட் ஆப்ரேட்டிங் மிசின் கிடைக்கின்றது

பெடல் ஆப்ரேட்டிங் மிசின் மற்றும் ஆட்டோமேட்டிக் மிசின்களும் கிடைக்கின்றது


தேவையான உற்பத்தி பொருட்கள்:


மூல பொருட்களான பாக்குமட்டையை நாம் மொத்தமாக குறைந்தவிலையில்  வாங்கி கொள்ளலாம் இவை சேலம், பொள்ளாச்சி, கோயமுத்தூர், கேரளா மற்றும் கர்நாடக போன்ற இடங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன


தயாரிக்கும் முறை:


  • முதலில் பாக்குமட்டையை தண்ணீரில் ஊற வைக்கவும்.


  • அதன் பிறகு சிறிது நேரம் வரை காய வைக்கவேண்டும், முழுவதுமாக காயவைக்கக்கூடாது


  • அதன் பின்பு மட்டையை  எடுத்து மிஷினில் வைத்து ஒரு அமுக்கு அமுக்கினால் பாக்குமட்டை பிளேட் தயாராகி விடும்.


  • மேலும் நாம் நமக்கு தேவையான அளவிற்கு தட்டின் அளவை சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை மாற்றி கொள்ளலாம் 


சந்தை வாய்ப்பு:

நாம் தயாரித்த பாக்குமட்டைகளை பேக்கிங் செய்து சூப்பர் மார்க்கெட், மற்றும் சிறிய கடைகள், உணவகங்கள், கோயில்கள், திருமண மண்டபங்கள், கையேந்திபவன் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்


மேலும் இணைய👉Whatsapp Link👇

https://chat.whatsapp.com/LkawHRQenE05TzmilaQ2jS

Comments

Popular posts from this blog

நாட்டு கோழி வளர்ப்பில் இவ்வளவு வருமானமா ?????

பெற்றோர்களே !! பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிரதை!

வேலை வாய்ப்பு மையத்தில்Online-ல் பதிவு செய்வது எப்படி ????