நாட்டு கோழி வளர்ப்பில் இவ்வளவு வருமானமா ?????

நாட்டுக்கோழி இனங்கள்

ஏறத்தாழ 20 வகையான நாட்டுக்கோழி இனங்கள் இந்தியாவில் உள்ளன, பரவலாக காணப்படும் இனங்களை பற்றிய சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் 7 கோழி வகைகள்,
1.சண்டைக் கோழி அல்லது அசில் கோழி.

2.குருவுக் கோழி -

3, பெருவிடைக் கோழி

4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி

 5. கழுருக் கோழி அல்லது கிராப்புக் கோழி

6.கொண்டைக் கோழி

7.குட்டைக்கால் கோழி

👉அசில் என்னும் சண்டைக்கோழி
அசில் என்பது அரேபிய மொழிச் சொல்லாகும். அசில் என்றால் உண்மையான அல்லது
சுத்தமானது என்று பொருள். ஆந்திர மாநிலத்தின் கடற்கரை ஓர மாவட்டங்கள் இதன்தாயகமாகும். ஆந்திர மாநிலத்தில் உள்ள, கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் வாழும் ஆதிவாசிமக்கள், பல்லாண்டுகளாக இந்த சண்டைக் கோழிகளை வளர்த்து வருகின்றனர்.

இந்தியக் கோழி இனங்களிலேய இது தான் பெரிய கோழியாகும். இக்கோழிகளை பல
காலமாக ஆந்திர மாநிலத்திலும், தமிழ்நாட்டினும் சண்டைக்காகவே வளர்த்து வருகின்றனர்.
அசில் இனக் கோழிகள் பெரிய உருவத்திற்கும், கம்பீரமான நடைக்கும், அதிக சக்திக்கும்
சண்டையிடும் திறமைக்கும் பெயர் பெற்றதாகும்.

சேவல் 3-4 கிலோ எடையும், பெட்டைக் கோழி 2 - 3 கிலோ எடையும் இருக்கும்.

இக்கோழியின் அலகு, குட்டையாகவும், வாலாந்தும் இருக்கும். கோழியின் முகம் நீளமாகவும்,இறகுகள் அதிகம் இல்லாமலும் இருக்கும். கழுத்து நீண்டும், வால் சிறியதாகவும் இரண்டு
கால்களும் நல்ல உறுதியாகவும் இருக்கும்.

அசில் இனக் கோழிகள் பெரும்பாலும் சண்டைக்காவும், இறைச்சிக்காவும் தான்வளர்க்கப்படுகின்றது.

      இவ்வினக் கோழிகள் 196 முதல் 200 நாட்களுக்குள் பருவத்திற்கு வந்து
விடும். ஒரு ஆண்டிற்கு 90- 100 மூட்டைகள் இடுவதுடன், முட்டையின் எடை 50 கிராம் இருக்கும்.


👉குருவுக்கோழி 
    

நாட்டுக்கோழிகளிலேயே மிகவும் சிறியவை குருவுக்கோழி இனமாகும். எடை குறைவாக இருப்பதோடு, நீண்ட காலம் அடைந்த உட்காராமல் கூடுதலாக மூட்டையிடும் குணம் கொண்டவை. தாய்க்கோழிகள் ஒரு ஆண்டில் மூன்று தடவை, அடைக்கு உட்கார்ந்து, குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை.

இரண்டு மாதத்திற்குள் குஞ்சுகளைப் பிரித்து விடும் குணம் கொண்டது. இக்கோழிகள் ஒரு தடவைக்கு, 12 முதல் 20 முட்டைகளிடும் தன்மை கொண்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக அதிகமாக ஆர்வத்துடன் வளர்க்கப்படும் இளம், இந்த குருவுக்கோழிகள் தான்.

👉பெருவிடைக் கோழி
        

இந்த இனக் கோழிகள், நடுத்தர எடை உடையவை. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இவ்வினக்கோழிகளை வளர்க்கின்றனர். தலையில் ஒற்றைக் கொண்டைப் பூ கொண்டது. 
இவைவருடத்திற்கு 50 முதல் 60 முட்டைகளிடும் ...

👉கடக்நாத் என்னும் கருங்கால் கோழி
         
கடக்நாத் என்னும் கருங்கால் கோழிகள் மத்தியப் பிரதேசத்தை தாயகமாக கொண்டவை ஆகும். கடக்நாத் கோழிகள், இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டவை ஆகும்.
எத்தகைய சூழ்நிலையிலும் வளரக்கூடியது என்பதால், இதற்கென தனிக்கோழி
வீடும் அமைக்கத் தேவையில்லை என்பதுடன்அதிக கவனமும் செலுத்த வேண்டியதில்லைஎன்பது இதன் சிறப்பு அம்சமாகும்.கருங்கால் கோழிகளை ராடியா மாவட்டத்தின் கருப்புத்தங்கம் என்றும் அழைக்கின்றனர். இவை மத்தியப் பிரதேசத்தை ஒட்டியுள்ள இராஜஸ்தான் மற்றும் கலராத் மாநிலங்களிலும் வளர்க்கப்படுகின்றன.

கடக்நாத் கோழிகள் 180 நாட்களில் பருவத்திற்கு வந்து விடும். வருடத்திற்கு 85 முட்டைகளிடும், முட்டையின் எடை 41 முதல் 42 கிராம் எடை இருக்கும், சேவல் 112 முதல் 2 கிலோ எடையும், பெட்டைக்கோழி கியோ முதல் 1 12 கிலோ எடையும் இருக்கும்.

               கடக்நாத் கோழியின் தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருப்பதுடன், பெட்டைக் கோழிகளில் இவை அடர்ந்த கிரே கலரில் இருக்கும், கொண்டையும், தாடியும், நாக்கும் கத்தரிக்காய் நிறத்தில் இருக்கும். இதன் இறைச்சி முழுவதுமே கருப்பு நிறத்திலேயே இருப்பதால் ஆற்கு கருப்பு இறைச்சி அல்லது பலமாசி பான்று பெயர். இவை மரபுரீதியாக மெலனின் நிறமி பிக்மென்!) மூலம் இந்த நிறம் இறைச்சியில் ஏற்படுகிறது.


👉கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி
   
      
இவ்வினத்தில் கழுத்துப் பகுதியில்
இறகுகள் இல்லாமல் வெறுமையாகவும்அல்லது கழுத்தின் முற்பகுதியில் கொத்தாகச்சிறகுகள் இருப்பதால் இதற்கு மொட்டைக்கழுத்துக் கோழி என்றுபெயர். 
கேரளாவின்திருவனந்தபுரப் பகுதி மொட்டைக் கழுத்துக்கோழியின் தாயகமாகும். இவ்வினம் நீளமானஉருண்டை வடிவக் கழுத்துடைய இனமாகும்.பருவ வயதை அடையும் பொழுது. சேவலின்தோல் சிவப்பு நிறமாக மாறும்வது வாரத்தில் உடல் எடை 1 கிலோ அடையும். 1 ஆண்டிற்கு சராசரியாக 95 முதல்100 முட்டைகள் இடும். வெயிலையும், மழையையும் தாங்கக் கட்டிய உடலமைப்புக் கொண்டவை.
இதன் இறைச்சி மிருதுவாகவும், சுவையாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும்.


👉கொண்டைக்கோழி
         
      
         கொண்டைக் கோழிகள் மிகவும் அரிதாகக் காணப்படும் இளமாகும். இதன் தலைமீது கொண்டைப் பகுதியில் கொத்தாக முடி இருப்பதால் இதற்கு கொண்டைக்கோழி என்று பெயர் இவை சிறியதாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். 


👉குட்டைக் கால்  கோழி
        
குட்டைக்கால்களும், கொண்டைக் கோழியைப் போல், மிகவும் அரிதாகக் காணப்படும் கோழி இனமாகும். இதனுடைய வால் தரையைத் தொட்டுக் கொண்டு போகின்ற அளவிற்கு கால்கள் குட்டையாக

Comments

Popular posts from this blog

பெற்றோர்களே !! பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிரதை!

வேலை வாய்ப்பு மையத்தில்Online-ல் பதிவு செய்வது எப்படி ????